ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பக்ரீத்’. ஒரு ஒட்டகமும் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறும் இப்படத்தை எம்.எஸ்.முருகராஜ் தயாரித்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா முதலான இடங்களில் பாமாகியுள்ள ‘பக்ரீத்’ திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை ரூபன் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை மதன் கவனித்துள்ளார்.
#Vikranth #VasundharaKashyap #UdhayanidhiStalin #M10Production #Bakrid #RedGiantMovies
#DImman
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதிராவ், இயக்குனர் ராம் ஆகியோர் நடிக்கும்...
கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் 17-வது...
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதிராவ், இயக்குனர் ராம் ஆகியோர் நடிக்கும்...