அதர்வாவின் புதிய படம் ஆரம்பம்!

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா இரண்டாவது முறையாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 30-Jul-2019 10:57 AM IST VRC கருத்துக்கள்

‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ’பிரேமம்’, ‘கொடி’ உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார் என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. ‘ MKRP புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு வசனம் எழுதுவது குறித்து கபிலன் வைரமுத்து கருத்து தெரிவித்திருப்பதில், ‘ஒரு முழுநீள காதல் படத்திற்கு வசனம் எழுதுவது இது முதல் முறை! இயக்குனர் கண்ணனுக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இன்னும் பெயரிடப்படாத இந்த படம் ஒரு முழுநீள காதல் படமாக உருவாகிறது என்பது உறுதியாகியுள்ளது. ‘100’ படத்தை தொடர்ந்து அதர்வா நடிக்கும் இந்த படம் கண்ணனும் அதர்வாவும் இணையும் இரண்டாவது படமாகும். இந்த படம் தவிர கண்ணன் சந்தானம் நடிப்பிலும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவலையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தோம்.

#RKannan #Boomerang #AtharvaaMurali #AnupamaParameswaran #MKRPProductions #KabilanVairamuthu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பூமராங் ட்ரைலர்


;