ரிலீஸ் தேதி குறித்த சிவகார்த்திகேயன் படம்!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 27-Jul-2019 5:42 PM IST Top 10 கருத்துக்கள்

‘இரும்புத்திரை’ படத்தை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் படம் ‘ஹீரோ’. சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்சன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் அர்ஜுன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படகுழுவினர் வெளியிட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ‘ஹீரோ’ டிசம்பர் 20-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஹீரோ’ படத்திற்கு பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’யில் இசை அமைப்பாளராக பணிபுரிந்த யுவன் சங்கர் ராஜாவே இசை அமைக்க, ‘இரும்புத்திரை’க்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் வில்லியம்ஸே ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


#SivaKarthikeyan #PSMithran #Arjun #AbhayDeol #KalyaniPriyadarshan #YuvanShankarRaja #KJRStudios #Ruben #GeorgeWilliams

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;