'கென்னடி கிளப்'பில் நான் ஹீரோ இல்லை! - சசிகுமார்

'கென்னடி கிளப்'பில் நடித்திருக்கிற நிஜ கபடி  வீராங்கனைகள் தான் படத்தின் ஹீரோஸ்!

செய்திகள் 27-Jul-2019 3:05 PM IST VRC கருத்துக்கள்

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்க, சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் பாரதிராஜா இணைந்து நடித்திருக்கும் படம் ‘கென்னடி கிளப்’. பெண்கள் கபடி போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
நிஜமான கபடி வீராங்கனைகள் நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், 'கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள் தான். கபடி பயிற்சியாளர் செல்வமாகதான் நான் நடித்திருக்கிறேன். நல்லுச்சாமியாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார். கபடியில் வென்றால் தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்று தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.

இதுபோன்ற படங்களில் நிறைய நடிக்க வேண்டும். பாரதிராஜா சாருடன் நடிக்கும் போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுகமான அனுபவமாக இருந்தது. டி.இமானின் இசை இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும். இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

#KennedyClubFromAugust15th #KennedyClubAudioLaunch #KennedyClub #Susienthiran #SasiKumar #Bharathiraja #Samuthirakani #DImman #Kabaddi #NallusamyPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;