‘விஸ்வாசம்’ பட வசூலில் 50 கோடியை இமானுக்கு கொடுக்கலாம்! - டி.சிவா

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கென்னடி கிளப்’ ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 27-Jul-2019 2:45 PM IST Top 10 கருத்துக்கள்

பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘கென்னடி கிளப்’. இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரகனி, சூரி, முனீஸ்காந்த், அறிமுகம் மீனாக்‌ஷி, காயத்ரி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த நிஜ கபடி வீராங்கனைகளும் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் டி.சிவா, கதிரேசன், பி.எல்.தேனப்பன், இயக்குனர்கள் அகத்தியன், எழில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, ‘’இந்த படத்திற்காக டி.இமான் இசை அமைந்துள்ள பாடல்கள் மிகவும் நன்றாக வந்துள்ள்து சமீபகாலமாக மனதில் நிற்கும்படியான நிறைய ஹிட் பாடல்களை கொடுத்தவர் டி.இமான்தான். சமீபத்தில் வெளியாகி பெரும் வசூல் குவித்த ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றிக்கு இவரும் இவர் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்ணான கண்ணே…’ பாடலும் ஒரு முக்கிய காரணம். ‘விஸ்வாசம்’ படம் 100 கோடி ரூபாய் வசூலித்திருந்தால் அதில் 50 கோடியை ‘கண்ணான கண்ணே…’ பாடலுக்காக டி.இமானுக்கு கொடுக்கலாம். மனதை உருக்கிய பாடல் அது’’ என்றார்.

‘நல்லுச்சாமி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தாய் சரவணன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது

#KennedyClubFromAugust15th #KennedyClubAudioLaunch #KennedyClub #Susienthiran #SasiKumar #Bharathiraja #Samuthirakani #DImman #Kabaddi #NallusamyPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;