A1 - விமர்சனம்

காமெடி பேக்கேஜ்!

விமர்சனம் 26-Jul-2019 12:45 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Johnson K
Production: CircleBox Entertainment
Cast: Santhanam, Tara Alisha Berry, Rajendran, Manohar, Swaminathan, Saikumar, Yatin Karyekar,Jayasurya, Mayilsamy
Music: Santhosh Narayanan
Cinematography: Gopi Jagadeeswaran
Editor: Leo John Paul

‘நாளைய இயக்குனர்’ வின்னர் லிஸ்டிலிருந்து கோலிவுட் டைரக்டராகியிருக்கும் அடுத்த வரவு ஜான்சன் கே. இவர் இயக்கத்தில் ‘அக்யூஸ்ட நம்பர்.1’ ஆக மாறியிருக்கிறார் சந்தானம். ‘A1’ எல்லோரையும் சிரிக்க வைத்திருக்கிறதா?

கதைக்களம்

’ஒரு ரௌடி ஐயரைத்தான் நான் கட்டிக்குவேணாக்கும்’ என பிடிவாதமாக இருக்கும் ஹீரோயின் தாரா அலிஸா பெர்ரி, அடிதடி ‘லோக்கல்’ பாய் சந்தானத்தை ஐயர் என நினைத்துக்கொண்டு காதலில் விழுகிறார். அதன் பின்னர், உண்மை தெரிந்ததும் ‘பிரேக்அப்’ ஆகி, சந்தானம் செய்யும் ஒரு சம்பவத்தின் மூலம் மீண்டும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார் தாரா. ஆனால், மகளின் காதலுக்கு ‘தோப்பனார்’ ரெட் சிக்னல் காட்டவே, சந்தானத்தின் காதல் மீண்டும் ‘பிரேக்டவுன்’ ஆகிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறுகிறது. ஆனால், இந்தமுறை அந்த ‘சம்பவத்தை’ நிகழ்த்துபவர்கள் சந்தானத்தின் டிகிரி தோஸ்த்ஸ். அந்த சம்பவத்தால் காதல் மட்டுமல்லாமல், சந்தானத்தின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. அப்படிப்பட்ட அந்த சம்பவம் என்ன? அதிலிருந்து சந்தானம் மீண்டும் காதலியை கை பிடித்தாரா இல்லையா? என்பதே ‘A1’.

படம் பற்றிய அலசல்

கதை என்று எதையாவது ஏடாகூடமாக யோசித்து, அதற்காக ஒரு திரைக்கதையை அமைத்து இரண்டரை மணி நேரம் இழுத்தடிப்பதைவிட, ‘காமெடிக் கவுன்ட்டர்’களின் தொகுப்பு ஒன்றை வைத்துக்கொண்டு அதற்கேற்றபடி ஒரு கதையை உள்ளே செருகி, காமெடி கதகளி ஆடியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜான்சன் கே. ஆங்காங்கே சின்னச் சின்ன போரடிக்கும் காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒட்டுமொத்தமாக படம் முழுக்க சிரித்து ரசிக்கும்படியான ஒரு அனுபவம் இப்படத்தில் ரசிகர்களுக்குக் கிடைத்தாலும், ஒரு முழுமையான திரைப்படம் பார்த்த திருப்தியை ‘A1’ ஏற்படுத்தியிருக்கிறதா என்றால்... நோ கமெண்ட்ஸ். ஒரு டூயட், ஒரு கானா என ரெண்டு பாடல்களில் மட்டுமல்லாமல், படம் முழுக்க தன்னுடைய பின்னணி இசை மூலமும் கவர்ந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவை படத்தின் தேவைக்கேற்ப பங்களிப்பைச் செய்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

‘இதானே உங்களுக்கு வேணும்’ என தன் ரசிகர்களின் ‘பல்ஸ்’ உணர்ந்து ஒரு படத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார் சந்தானம். ஹீரோவாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், படம் முழுக்க எல்லோரையும் சிரிக்க வைத்தால் போதும் என அவர் நினைத்ததற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. ஆனாலும், ரொமான்ஸ், டான்ஸ், ஃபைட் போன்ற ஏரியாக்களிலும் லேசாக பயணம் செய்து தன் ஹீரோ ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் சந்தானம். ஹீரோயின் தாரா அலிஸாவிற்கு அக்ரஹாரத்து மாமி கேரக்டர் நன்றாகப் பொருந்தியிருக்கிறது. முடிந்தளவுக்கு நடிக்கவும் செய்திருக்கிறார். இப்படத்தின் பெரிய ப்ளஸ், சந்தானம் கூடவே படம் முழுக்க பயணிக்கும் அவரது கூட்டாளிகள். ‘பழைய ஜோக்’ தங்கதுரை, ‘லொள்ளு சபா’ மாறன், ‘கோலமாவு கோகிலா’ டோனி ஆகியோர்தான் அந்த மூவர் கூட்டணி. இவர்களின் காமெடி பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது இப்படத்திற்கு. சந்தானத்தின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் ரெண்டே காட்சிகளில் ‘கைதட்டல்’ அள்ளுகிறார்.

பலம்

1. சந்தானம் அன்ட் கோவின் காமெடிகள்
2. சந்தோஷ் நாராயணன் இசை

பலவீனம்

1. கதை
2. ஒன்றரை மணி நேர ஸ்டாண்ட்அப் காமெடி பார்த்தது போன்ற உணர்வு எழுவது

மொத்தத்தில்...

‘சான்டா’வின் ரசிகர்களுக்கு எது தேவையோ அதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு ‘திரைமொழி’, ‘திரைப்பட அனுபவம்’ என்பதையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு ‘கலக்கப்போவது யாரு’ டைப் ஸ்டாண்ட் காமெடி மூலமே ஒண்ணே முக்கால் மணி நேரம் ‘கிச்சு கிச்சு’ மூட்டியிருக்கிறது ‘A1’ டீம். இதுதான் இப்படத்தின் ப்ளஸும், மைனஸும்.

ஒரு வரி பஞ்ச்: காமெடி பேக்கேஜ்!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;