‘கிச்சா’ சுதீப்பின் ‘பயில்வான்’ எப்போது ரிலீஸ் தெரியுமா?

‘கிச்சா’ சுதீப் நடிக்கும் ‘பயில்வான்’ செப்டம்பர் 12-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 25-Jul-2019 11:09 AM IST VRC கருத்துக்கள்

‘நான் ஈ’ படப்புகழ் கிச்சா சுதீப் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் படம் ‘பயில்வான்’. ‘ஆர்.ஆர்.ஆர்.மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். குத்துச்சண்டையை மையமாக வைத்து எமோஷன், ஆக்‌ஷன். நகைச்சுவை கலந்த ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படம் செப்டம்பர் 12-ஆம் வெளியாகும் என்ற அறிவிப்பை கிச்சா சுதீப் தனது ட்வீட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் ‘கிச்சா’ சுதீப் தனது கனவுகளை நனவாக்க மேற்கொள்ளும் பயிற்சிகள் அதில் அவர் எதிர்கொள்ள் வேண்டி இருந்த சவால்கள் பற்றிய கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் கிச்சா சுதீப்புடன் அகான்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் பிரபலம் சுனில் ஷெட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் சுஷாந்த் சிங், கபீர் துஹான் சிங், ஷரத் லோகித்ஷ்வா, அவினாஷ் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசை அமைக்கிறார். கருணாகர் ஒளிப்பதிவு செய்கிறார்.பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான ராம் -லக்‌ஷ்மண் சண்டை காட்சிகளை அமைக்க, குத்துச்சண்டை காட்சிகளை கே.வி.ரவிவர்மா லாரன்ஸ் ஸ்டோவால் ஆகியோ அமைக்கின்றனர். #KichchaSudeep #Pailwaan #PailwaanFromSeptember12th #AbhinayaChkravarthyBaadshah #SunielShetty

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;