சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பாலிவுட் பிரபலம்!

‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறார் பாலிவுட் நடிகர் அபய் தியோல்

செய்திகள் 20-Jul-2019 4:40 PM IST Top 10 கருத்துக்கள்

‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ஹீரோ’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் அர்ஜுன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம் அபய் தியோல் நடிக்கிறார் என்ற தகவலை இந்த படத்தை தயாரிக்கும் ‘கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ்’ நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவர் பல பாலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஹீரோ’ படத்திற்கு பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’யில் இசை அமைப்பாளராக பணிபுரிந்த யுவன் சங்கர் ராஜாவே இசை அமைக்க, ‘இரும்புத்திரை’க்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் வில்லியம்ஸே ஒளிப்பதிவு செய்கிறார்.

#PSMithran #IrumbuThirai #Hero #SivaKarthikeyan #KJRStudios #KalyaniPriyadarshan #Arjun #AbhayDeol

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;