ஆடை – விமர்சனம்

தெரிந்தவர்களுடன் விளையாடினால் நலம்! இல்லை என்றால் ஆபத்து!

விமர்சனம் 20-Jul-2019 4:11 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Rathna Kumar
Production: V Studios
Cast: Amala Paul, Ramya Subramanian, Sriranjini & Ananya Ramprasad
Music: Pradeep Kumar & Oorka (band)
Cinematography: Vijay Karthik Kannan
Editor: Shafique Mohammed Ali

‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‘ஆடை’. மானம் காக்க ஆடை அவசியம் என்பதை சொல்ல வருகிறதா இந்த ஆடை?

கதைக்களம்

டிவி சேனல் ஒன்றில் வேலை செய்யும் காமினி (அமலாபால்), விவேக் பிரசன்னா ரோகித் நந்தகுமார், கிஷோர், கார்த்திக் ஆகியோருடன் இனைந்து ‘ஃப்ராங்க் ஷோ’ செய்து வருகிறார். இந்நிலையில் அவர்கள் வேலை செய்து வந்த டி.வி.சேனல் அலுவலகம் காலி செய்யப்படுகிறது! அன்றைய தினம் அமலா பால் பிறந்தநாள்! எல்லோரும் தொடர்ந்து ஐந்து வருடங்கள் அந்த கட்டிடத்தில் பணிபுரிந்ததால், அந்த கட்டிடத்தில் கடைசியாக எல்லோரும் இரவு மது அருந்திவிட்டு அமலாபாலின் பிறந்த நாளை ஜாலியாக கொண்டாடுகிறார்கள். எல்லோரும் போதைக்கு அடிமையாகிறார்கள். காலை விடிந்ததும் பார்த்தால் அமலாபால் மட்டும் அந்த கட்டிடத்தில் நிர்வாணமாக கிடக்கிறார். அமலாபால் இப்படி நிர்வாணமாக கிடக்க யார் காரனம்? அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார்? என்பதற்கான பதில்களே ‘ஆடை’

படம் பற்றிய அலசல்

ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்த்தானத்தை ஆண்டவர்கள் அப்போது பெண்களுகு எதிராக நிறைய கொடுமைகளை செய்து வந்தார்கள்! அப்போது ஆடை உரிமைக்காக போராடுகையில் நங்கேலி என்ற பெண் தன் மார்பகங்களை அறுத்து எறிந்து மாண்டு போவார்! அந்த சரித்திர சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘ஆடை’ படத்தின் கதையை எழுதிய ரத்னகுமார், அதனை அருமையான ஒரு திரைக்கதையாக்கி, அழகாக காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கிற விதம் அருமை!

ஒரு சுரங்க நடைப் பாதையில் இரவு நேரத்தில் படம் பிடிக்கப்படும் விறுவிறுப்பான ஒரு ஃப்ராங்க் ஷோவுடன் ஆரம்பிக்கும் படம் கடைசி வரையிலும் அடுத்து என்ன என்று யூகிக்க முடியாதவிதமாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். விடிந்ததும் நிர்வாண கோலத்தில் கிடக்கும் அமலா பால், அதனை தொடர்ந்து அந்த இடத்திலிருந்து அவர் தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகள், இரண்டு திருடர்கள் காரணமாக அந்த இடத்திற்கு வரும் போலீஸ், அவர்களது பார்வையில் படாமல் தன்னையும் தன் மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள அமலாபால் மேற்கொள்ளும் போராட்டங்கள், கடைசியில் அமலா பால் இந்த நிலைமைக்கு ஆளாக காரணமாவரின் எண்ட்ரி என்று படம் கடைசி வரையிலும் விறுவிறுப்பாகவே பயணித்து ரசிக்க வைக்கிறது.

ரத்னகுமார் உருவாக்கிய ஸ்கிரிப்ட்டுக்கு அமலாபால் எற்று நடித்த கேரக்டரும், அவரது சிறந்த நடிப்பாற்றலும், ரத்னகுமாரே எழுதியுள்ள வசனங்களும் வலிமை சேர்த்துள்ளது. இதற்கு அடுத்து விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவை சொல்லலாம. அதிலும் நிர்வாணமாக வரும் அமலாபால் சம்பந்தப்பட்ட காட்சிகளை துளிகூட ஆபாசமில்லாமல் படம் படித்திருக்கும் விதம் அருமை! இந்த விஷயங்கள் தவிர பிரதீப்குமாரின் இசை (ஊர்கா பேண்ட்), ஷாஃபிக் முகமது அலியின் படத்தொகுப்பு ஆகிய விஷயங்களும் ‘ஆடை’க்கு பலம் சேர்த்துள்ள டெக்னிக்கல் விஷயங்களாகும்! இதுபோன்ற நிறைகளுடன் பயணிக்கும் கதையில் சில குறைகள் இல்லாமலும் இல்லை! கதை சீரியஸாக பயணிக்கையில் அமலாபால் மாட்டிக்கொண்ட கட்டிடத்துக்கு அருகில் ஊர்கா பேண்ட் குழுவினர் நடத்தும் இசை நிகழ்ச்சி எரிச்சலையே ஏற்படுத்துகிறது. அதைப்போல காமெடிக்காக சேரக்கப்பட்டது மாதிரி அமைந்துள்ள இரண்டு காமெடி போலீஸ் கேரக்டர்களும் கதையுடன் ஒட்டவில்லை!

விளையாட்டுத்தனமாக செய்யும் ஒரு காரியம் எப்படி ஒருவரை பாதிக்கப்பட வைக்கிறது, சமூகவலைதளங்கு அடைமையாகி விடுபவர்கள் எப்படி எல்லாம் சீரழிகிறார்கள் என்பது போன்ற சமூகத்துக்கு தேவையான சில நல்ல கருத்துக்களையும் தாங்கி வரும் இப்படத்தை தாராளமாக வரவேற்கலாம்!

நடிகர்களின் பங்களிப்புஇதுபோன்று காமினி என்ற போல்டான ஒரு பெண்ணின் கேரக்டரில் அதுவும் நிர்வாணமாக நடிக்க ஒரு தைரியம் வரவேண்டும்! அது அமலாபாலுக்கு வந்து சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார். ‘பெட்’ கட்டினால் எதையும் செய்யக் கூடிய தைரியமுடையவர் காமினி! அப்படி பெட் கட்டிக்கொண்டது போல் செய்யப்போன ஒரு காரியம் தன்னை நிர்வாண கோலத்துக்கு கொண்டு வர, எல்லாத்தையும் விட பெரியது மானம் தான் என்ற விஷயத்தை வலியுறுத்தியிருக்கிற காமினி கேரக்டரும், அதில் அமலாபாலின் சிறந்த நடிப்பும் பாராட்டுக்குரியது. இவருக்கு அடுத்தபடியாக படத்தில் சிறப்பாக நடித்திருப்பவர்கள் அமலாபாலின் கூட்டளிகாக வரும் விவேக் பிரசனா, ரோகித் நந்தகுமார், கிஷோர், கார்த்திக் மற்றும், ஃப்லாஷ் பேக் கிளைமேக்ஸ் என்று வரும் நங்கேலி கேரக்டரில் நடித்திருக்கும் அனன்யா ராம்பிரசாத் ஆகியோர்கள்தான்!

பலம்

1.கதை, இயக்கம்

2.அமலாபால்

3.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. உர்கா பேண்ட் சம்பந்தப்பட்ட பாடல்

2. காமெடிக்காக திணிக்கப்பட்ட போலீஸ் கேரக்டர்கள்

மொத்தத்தில்…

அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பது, சென்சாரில் ‘A’ சர்டிஃபிக்கெட் என்று இப்படத்தை வயது வந்தவர்களுக்கு மட்டுமான படம் என்பதை மறந்துவிட்டு, அனைவரும் பார்க்க கூடிய, நல்ல மெசேஜுள்ள ஒரு படமாக உருவாகியுள்ளது ‘ஆடை’

ஒருவரி பஞ்ச் : தெரிந்தவர்களுடன் விளையாடினால் நலம்! இல்லை என்றால் ஆபத்து!

ரேட்டிங் : 6/10

#Aadai #AmalaPaul #VJRamya #RathnaKumar #PradeepKumar #OorkaBand #VStudios

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;