கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் இணையும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்த்ல் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கும் படத்தின் புதிய தகவல்கள்!

செய்திகள் 19-Jul-2019 1:36 PM IST Top 10 கருத்துக்கள்

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடிக்கிறாகள் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சஷிகாந்தின் ஒய்நாட் ஸ்டுடியொஸ் நிறுவனமும், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சஷிகாந்தின் 18-ஆவது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி இணைந்து நடிக்க இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக வினோத் ராஜ்குமார் கவனிக்க, விவேக் ஹர்ஷன் படதொகுப்பு செய்கிறார். சண்டை காட்சிகளை அன்பறிவ் அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது.

#KarthikSubbaraj #Dhanush #AishwaryaLekshmi #YNOTStudios #Sashikanth #SanthoshNarayanan #ShreyaasKrishna #VivekHarshan #Anbariv

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;