உணர்வு – விமர்சனம்

மனித உணர்வை தூண்டிவிட்டு ஆடும்  ஆட்டம்!

விமர்சனம் 19-Jul-2019 12:14 PM IST Top 10 கருத்துக்கள்

Production - Amrutha Film Center – Shekar Jayaram
Written and Directed By : Subu
Cast – Subu, Suman, Arul sankar, Shinav, Angitha Navya
Music : Nakul Abhyankar
DOP : David Jan
Editor : Chandan

ஒரு சில கன்னட படங்களை இயக்கிய சுப்பு, தமிழில் முதன் முதலாக இயக்கியுள்ள படம் ‘உணர்வு’. பல்வேறு சர்வதேசத்திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைபெற்ற இப்படத்தில் இயக்குனர் சுப்புவுடன், சுமன், அருள் சங்கர், ஷினவ், கொட்டாச்சி, அங்கிதா நவ்யா, கந்தசாமி, வெங்கட் பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ’உணர்வு’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

மனிதநேய உணர்வு கொண்ட தொழிலபதிர் ராமதுரை (சுப்பு). பிச்சைகாரர்களை கூட அழைத்து வந்து அவர்களுக்கு வேலை கொடுத்து அவர்களது வாழ்வில் ஒளிவீச செய்த ராமதுரை, சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுபவராகிறார்! ராமதுரையின் சேவைகள் குறித்து கேளவிப்படும் முதல் அமைச்சர் சுமன், அவரை நேரில் அழைத்து அவருக்கு தேவயான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார். பிச்சைக்காரர்களின் நல் வாழ்விற்காக ராமதுரையிட்டம் அரசாங்கத்துக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை வழங்குகிறார். அத்துடன் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசாங்க டெண்டர் வேலைகளையும் வழங்குகிறார். சுமனின் இந்த செயல்கள், அவரை கைக்குள் போட்டுக்கொண்டு நாட்டில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் எல்.எல்.ஏ. அருள் சங்கருக்கு பெரும் கோபத்தை உண்டாக்க, ராமதுரை, சுமன், அருள் சங்கர் ஆகியோரது ‘உணர்வு’கள் என்னென்ன வேலைகளை செய்ய வைக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

மனிதர்களிடம் இருக்கும் ‘உணர்வு’ என்ற விஷயத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை புதுசு! ஆனால் அதை ரசிக்கும்படியான காட்சிகளாக தருவதில் இயக்குனர் சுப்பு சரியாக கவனம் செலுத்தவில்லை. மனித உணர்வுகளை முதலீடு செய்ய வைத்து அதன் மூலம் பெயரும், புகழும், பணமும் சம்பாதிக்க நினைக்கும் ராமதுரை செய்யும் சில காரியங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் வித்தியாசமான சிந்தனை காட்சிகளாக இருந்தாலும் அவை நாடகத்தன்மையுடன் பயணிப்பதால் பெரிதாக ஈரக்கவில்லை! வாழ்வளித்த ஒரு பிச்சைக்காரனை வைத்து சுமனுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த அருள் சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளை ராமதுரை தீர்த்துகட்டுவது போன்ற சில காட்சிகள் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. ஆனால் கதைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் வரும் விளம்பர கம்பெனி, அதன் மேலாளராக வரும் கொட்டாச்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் எரிச்சலைதான் தருகிறது. ராமதுரைக்கு பக்கபலமாக இருந்து செயல்படுபவராக வரும் ஷினவ் மற்றும் இவரது காதலியாக வரும் அங்கிதா நவ்யா ஆகியோருக்கு இடையிலான காதல் காட்சிகளும், அதனையொட்டி வரும் பாடல்களும் சொல்லும்படியாக சுவாரஸ்யத்தை தரவில்லை. ஆனால் பின்னணி இசையில் கவனம் பெறுகிறார் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் நகுல் அபினாக். டேவிட் ஜானின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாய் அமைந்துள்ளது. ஆனால் படத்தொகுப்பாளர் சந்தன் காட்சிகளை ஒருங்கிணைப்பதில் போதுமான கவனம் செலுத்தவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

ராமதுரையாக வரும் இயக்குனர் சுப்புவின் நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது. முதல் மந்திரியாக வரும் சுமன் தனது பக்குவப்பட்ட நடிப்பை வழங்கி முதல் அமைச்சர் கேரக்டரை சிறப்பாக்கியுள்ளார். காதல் ஜோடியாக வரும் ஷினவ், அங்கிதா நவ்யா, எம்.எல்.ஏ.வாக வரும் அருள் சங்கர், பிச்சைகாரர்களாக வரும் கந்தசாமி, வெங்கட் பரத்வாஜ், விளம்பர கம்பெனி மேலாளராக வரும் கொட்டாச்சி ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.மாறுபட்ட சிந்தனையுடைய கதை அமைப்பு
2.‘உணர்வு’ என்ற விஷயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு சில காட்சிகள்

பலவீனம்

1.நாடகத்தன்மையுடன் பயணிக்கும் பெரும்பாலான காட்சிகள்

2.கொட்டாச்சி சம்பந்தப்பட்ட காட்சிகள்

3. சுவாரஸ்யம் தாராத பாடல் மற்றும் காதல் காட்சிகள்

மொத்தத்தில்…

மனிதர்களின் ‘உணர்வு’ என்ற விஷயத்தை வைத்து வித்தியாசமான கதையை உருவாக்கிய இயக்குனர் சுப்பு, அதனை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பான, சுவாரஸ்யமான காட்சிகளாக அமைத்து இயக்கி இருந்தால் இப்படம் வணிகரீதியாகவும் கவனம் பெறும் படமாக அமைந்திருக்கும்!

ஒருவரி பஞ்ச் : மனித உணர்வை தூண்டிவிட்டு ஆடும் ஆட்டம்!

ரேட்டிங் : 3.5/10

#Subu #Suman #ArulSankar #Shinav #AngithaNavya #UnarvuMovieReview #Unarvu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Watchmen ட்ரைலர்


;