விஜய் ஆண்டனியை இயக்கும் ‘மெட்ரோ’ பட இயக்குனர்!

‘மெட்ரோ’ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம்!

செய்திகள் 16-Jul-2019 3:07 PM IST VRC கருத்துக்கள்

‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதில் ‘தமிழரசன்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் விஜய் ஆண்டனி ‘மெட்ரோ’ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நடித்த ‘ஜாம்பவான்’, அர்ஜுன் நடித்த ‘வல்லக்கோட்டை’ ஆகிய படங்களை தயாரித்தவரும் இப்போது சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் ‘ராஜவம்சம்’ படத்தை தயாரித்து வருபவருமான T.D.ராஜா தனது ‘செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

அரசியல் கலந்த த்ரில்லர் ரக படமாம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ‘உரு’ படத்திற்கு இசை அமைத்த ஜோகன் இசை அமைக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடந்தது. இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கல் விரைவில் வெளியாக இருக்கிறது.


#MetroAnandKrishnan #VijayAntony #SenthurFilmsInternational #TDRaja #UruJohanShevanesh #NSUdhayakumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் - ட்ரைலர்


;