தொடரும் அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 16-Jul-2019 12:14 PM IST Top 10 கருத்துக்கள்

பாலிவுட் பிரபலம் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படப் புகழ் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியங், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ‘நேர்கொண்ட பார்வை’யை முதலில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இப்போது ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அதாவது ஆகஸ்ட் 8-ஆம் தேதி ‘நேர்கொண்ட பார்வை’யை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்து அதனை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். சமீபகாலமாக அஜித் நடிக்கும் படங்களை வியாழக் கிழமைகளில் ரிலீஸ் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’யும் வியாழக்கிழமை சென்டிமெண்டோடு வெளியாகிறது.ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நீர்வ ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#Thala #NerkondaPaarvai #NKP #ShraddhaSrinath #AjithKumar #HVinoth #BoneyKapoorProductions #AbhiramiVenkatachalam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;