‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படம் விக்ரமின் 58-ஆவது படம் என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இந்த படத்தை லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோ’ நிறுவனமும் ‘VIACOM 18 STUDIOS’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ‘இராவணன்’ ஆகிய படங்களில் விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது மீண்டும் விக்ரமுடன் இணைந்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. இந்த படத்தில நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரவில் வெளியாக இருக்கிறது. .
#Vikram58 #AjayGnanamuthu #ChiyaanVikram #Viacom18Studios #Vikram58WithARRahmanMusical #Vikram58FromApril2020 #ARRahman
விக்ரம் நடிப்பில் வெளியான ‘டேவிட்’, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படமான ‘சோலோ’ மற்றும் சில...
அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘கோப்ரா’. விக்ரமின் 58-வது படமாக உருவாகி...
‘டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம்...