போதை ஏறி புத்தி மாறி – விமர்சனம்

‘போதை’க்கு அடிமையாகாமல் இருக்க, புத்திமதி சொல்ல வந்துள்ள படம்!

விமர்சனம் 12-Jul-2019 1:50 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Chandru K R
Production: Rise East
Cast: Dheeraj, Pradaini, Dushara, Meera Mitthun & ‘Datto’ Radha Ravi
Music: KP
Cinematography: Balasubramaniem
Editor: VJ Sabu Joseph

அறிமுக இயக்குனர் சந்துரு.K.R. இயக்கத்தில் அறிமுகங்கள் தீரஜ், பிரதாயினி, துஷாரா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘போதை மாறி புத்தி மாறி’ எப்படி?

கதைக்களம்

காலை விடிந்ததும் துஷாராவுடன் திருமணம் என்றிருக்கும் நிலையில் தீரஜ் தன் நண்பர்களை பார்க்கச் செல்கிறார். அந்த இரவில் குடிக்கார நண்பர்கள் மது அருந்தி கூத்தடிக்கையில் மூக்கினால் உறிஞ்சி போதை ஏற்றிக்கொள்ளும் ஒரு ‘டிரக்’ பற்றி நண்பர்கள் தீரஜிடம் கூற, ஒரு கட்டத்தில் அந்த போதை மருந்தை நிஜமாகவே தீரஜ் உறிஞ்சி விடுகிறார். இதனால் தீரஜிற்கு போதை ஏற, அதன் பிறகு என்னென்ன நடக்கிறது என்பதுதான் ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் கதைக்களம்

படம் பற்றிய அலசல்

ஏற்கெனவே இதுபோன்ற கதைக்கருவுடன் கூடிய சில படங்கள் வெளிவந்துள்ளன என்றாலும், இப்படத்தில் தீரஜிற்கு போதை ஏறிய பிறகு நடக்கும் சம்பவங்களை மாறுபட்ட வகையில் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஓரளவுக்கு ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருப்பதால் படம் போரடிக்காமல் நகர்கிறது. நண்பர்கள் அனைவரும் போதையில் கிடக்க, அந்த வீட்டிற்குள் பிணமான நிலையில் கிடக்கும் பெண்கள், அதைப் பார்த்து பதறிபோய தீரஜ், செய்யும் காரியங்கள், அதனை தொடர்ந்து டிரக் கடத்தல்காரர்கள் மற்றும் போலீஸ் வருகை, இதையெல்லாம் எப்படி தீரஜ் எதிர்கொள்கிறார் என்று பயணிக்கும் காட்சிகள் படம் பார்ப்பவர்களை கொஞ்சம் குழப்பம் அடைய செய்தாலும், கடைசியில் அதுக்கெல்லாம் இயக்குனர் தந்திருக்கும் விளக்கம், படம் பார்ப்பவர்களுக்கு மாறுபட்ட ஒரு அனுபவத்தை தருவதோடு, நல்ல ஒரு மெசேஜையும் தருகிறது. ஒரு இரவில், ஒரு வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்களை அழகாக படம் பிடித்து படத்தை தாங்கி நிறுத்தியிருப்பதில் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்துக்கு முக்கிய பங்குண்டு! அதைப்போல சாபு ஜோசஃபின் படத்தொகுப்பும், KP-யின் பின்னணி இசையும் விறுவிறுப்பான கதையோட்டத்திற்கு பலம் சேர்த்துள்ள முக்கிய அம்சங்களாகும்.

நடிகர்களின் பங்களிப்பு

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அறிமுகம் தீரஜ் அந்த கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தி சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார். தீரஜிற்கு மனைவியாக வேண்டியவர் துஷாரா! சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறு ஒருவருக்கு மனைவியாகும் துஷாராவும் தனது பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். போதை மருந்து விற்பனைக்கு உடந்தையாக இருப்பவராகவும், போலீசஸ் அதிகாரியாகவும் வரும் அஜய் கம்பீரமாக தோன்றி மிரட்டல் ரக நடிப்பையும் வழங்கியுள்ளார். இவரது காதலியாக வந்து அவருக்கு வில்லியாக மாறும் பிரதாயினியின் கேரக்டரும் நடிப்பும் கவனம் பெறுகிறது. தீரஜின் அப்பாவாக வரும் ராதாரவி ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். இவர்கள் தவிர படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.சொல்லப்பட்டுள்ள மெசேஜ்

2.ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு

பலவீனம்

1. எந்த புதிய விஷயங்களும் இல்லாதது

2. குழப்பத்தை தரும் சில காட்சிகள்

மொத்தத்தில்

காட்சிகளை படமாக்குவதில் வித்தியாசமாக யோசித்த, இயக்குனர் கதையில் புதிய விஷயங்களை கையாள தவறியிருக்கிறார். இருந்தாலும் குடி, கஞ்சா, கொக்கையின், போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவோர் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்க்ள் என்பதை சமூகத்திற்கு நல்ல மெசேஜ் சொல்லும் விதமாக படமாக்கியிருப்பதால் ‘போதை ஏறி புத்தி மாறி’யை வரவேற்கலாம்!

ஒருவரி பஞ்ச் : ‘போதை’க்கு அடிமையாகாமல் இருக்க, புத்திமதி சொல்ல வந்துள்ள படம்!

ரேட்டிங் : 4/10

#BodhaiYeriBudhiMaari #PradainiSurva #Dheeraj #RiseEast #ChandruKR #KP #Balasubramaniem #VJSabuJoseph #BYBM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;