சென்ற வாரம் ‘ராட்சசி’, ‘களவாணி-2’, ‘காதல் முன்னேற்ற கழகம்’, ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ ஆகிய 4 நேரடி தமிழ் படங்கள் ரிலீசானது. அந்த வரிசையில் இந்த வாரம் எத்தனை படங்கள் வெளியாகின்றன? அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வருமாறு…
1.கொரில்லா
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொரில்லா’. ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ள இந்த படத்தில் தாய்லாந்த் நாட்டை சேர்ந்த ஒரு சிம்பன்சி குரங்கும் இடம்பெறுகிறது. . சமீபகாலமாக விலங்குகள் இடம்பெறும் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் சிம்பன்சி இடம் பெற்றுள்ள இந்த படத்தின் மீதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சாம்.சி.எஸ்.இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘கீ’ படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியாகும் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் விதமாக அமைந்துள்ளது என்று இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
2. கூர்கா
சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘யோகி’ பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘கூர்கா’. ‘4 MONKEYS STUDIO’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபுவுடன் ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், ராஜ்பரத் மற்றும் விஜய்யுடன் ‘சர்கார்’ படத்தில் நடித்த எலீசாவும் நடித்துள்ளார். ராஜ் ஆர்யன் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை கிருஷ்ணன் வசந்த கவனித்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். யோகி பாபு கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘தர்மபிரபு’ படத்தை தொடர்ந்து வெளியாகும் இப்படம் யோகி பாபுவிற்கு ஹீரோ என்ற முறையில் வெற்றிப் படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
3.வெண்ணிலா கபடிக்குழு-2
சாய் அற்புதம்' சினிமாஸ் தயாரிப்பில் செல்வசேகரன் இயக்கியிருக்கும் படம் 'வெண்ணிலா கபடிக்குழு 2'. சுசீந்திரன் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பெரிய வெற்றிபெற்ற 'வெண்ணிலா கபடிக்குழு'வின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் இந்தப்ப டத்தில் விக்ராந்த், அர்த்தனா, சூரி, நிதிஷ், அப்புக்குட்டி, ரவி மரியா, அருள் தாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். விளையாட்டு சம்பந்தப்பட்ட கதைகளை கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு செல்வகணேஷ் இசை அமைத்துள்ளார். கிச்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழர்களின் வீர விளையாட்டான கபடியை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்றே சொல்லப்படுகிறது.
4. போதை ஏறி புத்தி மாறி
‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சந்துரு.கே.ஆர். இயக்கியுள்ள படம் ‘போதை ஏறி புத்தி மாறி’. இதில் இதயநோய் மருத்துவத்தில் நிபுணராக இருக்கும் தீரஜ் கதையின் நாயகனாக நடிக்க, புதுமுகம் துஷாரா, பிரபல மாடல் அழகி பிரதாயினி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் மீரா மிதுன், ராதாரவி, சார்லி, மைம் கோபி, அர்ஜுன், ரோஷன், சரத், ஆஷிக் செந்தில் குமரன், சுரேகா வாணி, லிசி ஆண்டனி ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் கதாநாயகனுக்கு விடிந்தால் திருமணம் என்றிருக்கும் நிலையில் இரவு நண்பர்களுடன் சில மணிநேரம் ஜாலியாக பொழுதை கழிக்க சென்ற நிலையில் அவர் போதைக்கு அடிமையாக, அதனால் என்னென்ன நடக்கிறது என்பதை கதைக்களமாக கொண்ட படம் இது. இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்திடம் உதவியாளராக இருந்த கே.பி.இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை சாபு ஜோசஃப் செய்துள்ளார்.
5. தோழர் வெங்கடேசன்
'காலா பிலிம்ஸ்' சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்த மகாசிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தோழர் வெங்கடேசன். இதில் அறிமுகம் அரிசங்கர், அறிமுகம் மோனிகா சின்னகொட்லா ஆகியோர் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கிறார்கள். ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில் ஒரு விபத்து ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து ஏற்படும் சட்ட சிக்கல்கள் அவருடைய வாழக்கையில் எந்த விதமான தாக்கங்களை, வலிகளை ஏற்படுத்துகிறது என்பதை சொல்லும் இந்த படம் அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களையும் சுட்டி காட்டுகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவை வேதா செல்வம் செயதுள்ளார். சகிஷ்னா இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
மேற்குறிப்பிட்ட ஐந்து நேரடி தமிழ் படங்கள் இந்த வார ரிலீசாக இன்று(12-7-19) வெளியாகிறது. இதில் எந்தெந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படங்களாக அமையும் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
#VennilaKabaddiKuzhu2 #Gurkha #Gorilla #BodhaiYeriBuddhiMaari #ThozharVenkatesan
‘தர்மபிரபு’, ‘கூர்கா’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்த யோகி பாபு இப்போது பல்வேறு படங்களில்...
‘தர்மபிரபு’, ‘கூர்கா’ முதலான படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘யோகி’ பாபு, மற்றுமொரு...
'காலா பிலிம்ஸ்' சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக...