காதலருக்காக போராடும் த்ரிஷா!

‘கர்ஜனை’ படத்தில் காதலரை காப்பாற்ற போராடும்  கேரக்டரில் நடிக்கும் த்ரிஷா!

செய்திகள் 9-Jul-2019 4:33 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபகாலமாக கதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா! அந்த வரிசையில் த்ரிஷா நடிப்பில், சுந்தர் பாலு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கர்ஜனை’. செஞ்சுரி இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ‘SDC பிக்சர்ஸ்’ நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கிறது.

‘கர்ஜனை’யின் கதை மற்றும் த்ரிஷா கேரக்டர் குறித்து இயக்குனர் சுந்தர்பாலு கூறும்போது, ‘‘செய்யாத தவறுக்கான பழி நம் மீது விழுந்தால் நமக்கு கோபம் வரும் அல்லவா? செய்யாத தப்பிற்கு த்ரிஷாவின் காதலர் மீது பழி வர, அதிலிருந்து அவரை மீட்டுகொண்டு வர த்ரிஷா போராடுகையில் அவருக்கு ஒரு பெரும் இழப்பு ஏற்படுகிறது. அது என்ன? இதனை தொடர்ந்து த்ரிஷா எடுத்த முடிவுகள், செய்த செயல்கள் என்ன? என்பது தான் ‘கர்ஜனை’ என்றார்.

இந்த படத்தில் த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, தவசி, அமித் பார்கவ், சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா ஆகியோரும் நடிக்க, இப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். கர்ஜனை படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக இருக்கிறது.

#Garjanai #Trisha #SundarBalu #CenturyInternationalFilms #AmreshGanesh #VamsiKrishna #AmitBhargav #Madhumitha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;