பிரபாஸின் ‘சாஹோ’வில் இணைந்த மற்றுமொரு கோலிவுட் பிரபலம்!

பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்திற்காக பாடலை பாடிய அனிருத்!

செய்திகள் 9-Jul-2019 3:13 PM IST Top 10 கருத்துக்கள்

’பாகுபலி’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ‘காதல் சைக்கோ… என்று துவங்கும் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தனிஷ்க் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத், தவ்னி பனுஷாலி மற்றும் தனிஷ்க் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த தமிழ் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இதே பாடலின் தெலுங்கு பதிப்பிலும் அனிருத் பாடியுள்ளார். ‘சாஹோ’ படத்திற்காக பாடியிருப்பது குறித்து அனிருதும் ட்வீட் செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் பின்னணி இசை அமைக்க இசை அமைப்பாளர் ஜிப்ரானும் இணைந்துள்ள நிலையில் இப்போது மற்றுமொரு கோலுவுட் பிரபலமான அனிருத்தும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Prabhas #Saaho #AnirudhRavichander #Sujeeth #UVCreations #TSeries #KadhalPsycho #MadhanKarky #TanishkBagchi #ShraddhaKapoor

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;