மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. பல படங்களை விநியோகம் செய்த ரவி பிள்ளையின் ‘அபிஷேக் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இந்த படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார், மலையாள நடிகை லிஜா மோள் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடிந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அந்த வேலைகளும் சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து இப்படம் சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு அனைவரும் பாரக்க கூடிய படமாக ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கி, ரிலீஸுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர். அக்காள் - தம்பி உறவை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த படத்தில் அக்காவாக லிஜா மோள் நடிக்க, தம்பியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார் என்றும் சித்தார்த்த டிராஃபிக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு அறிமுகம் சித்துக்குமார் இசை அமைக்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். சென்சார் முடிந்ததை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தெதி விரைவில் வெளியாக இருக்கிறது.
#SivappuManjalPachai #Siddharth #GVPrakashKumar #KashmiraPardeshi #Sasi #
#SMPCensoredU
மாறுபட்ட கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் பரத் அடுத்து நடிக்கும் படம் ‘லாஸ்ட் 6...
இரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...
சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய...