‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ ‘திருமணம்’ ஆகிய படங்களில் நடித்த உமாபதி ராமையா அடுத்து நடிக்கும் படம் ‘தண்ணி வண்டி’. இந்த படத்தை இயக்குனர்கள் ராசு மதுரவன், தருண் கோபி, மனோஜ் குமார் ஆகியோரிடம் நீண்டகாலமாக உதவியாளராக பணியாற்றிய மாணிக்க வித்யா இயக்குகிறார். இந்த படத்தில் உமாபதி ராமையாவுக்கு ஜோடியாக ‘வில் அம்பு’ படப்புகழ் சம்ஸ்கிருதி நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, தேவதர்ஷினி, பாலசரவனன், வித்யூலேகா, சேரன்ராஜ், மனோஜ்குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், ‘ஆடுகளம்’ நரேன், ‘பிச்சைக்காரன்’ படப்புகழ் மூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்த படம் குறித்து இயக்குனர் மாணிக் வித்யா கூறும்போது, ‘‘வறட்சி மற்றும் நீர்பற்றாக்குறை உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் ‘தண்ணி வண்டி’ என்ற தலைப்புடன் உருவாகும் இந்த படம் மக்களிடத்தில் மேலும் கவனம் பெறும் என்று நம்புகிறோம். ஆனால் இந்த பிரச்சனைக்கும் படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அடிப்படையில் படத்தின் கதாநாயகன் மதுரையில் தண்ணீர் சப்ளை செய்யும் இளைஞர். அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார். எனவே, கதைக்கு ‘தண்ணி வண்டி’ என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று அந்த தலைப்பை சூட்டியிருக்கிறோம். இந்த படத்தின் மைய கதை தண்ணீர் சப்ளை செய்யும் இளைஞனுக்கும், மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான மோதல்களை நகைச்சுவையாக சொல்லும் படமே’’ என்றார்.
‘ஸ்ரீசரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஜி.சரவணன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை வீரசமர் கவனிக்கிறார். மோசஸ் இசை அமைக்கிறார். ஏ.எல் ரமேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
அன்பழகன் இயக்கத்தில் 2012-ல் வெளியாகி கவனம் பெற்ற படம் ‘சாட்டை’. சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன்,...
சசிகுமார் நடித்து வரும் படங்கள் ‘நாடோடிகள்-2’, ‘கொம்பு வச்ச சிங்கமடா’, ‘கென்னடி கிளப்’ ஆகியவை! இந்த...
இந்த (மார்ச்) மாதம் 1-ஆம் தேதி வெளியான படம் ‘திருமணம்’. சேரன் இயக்கி நடித்த இந்த படத்தில் கதாநாயகனாக...