‘சிக்சரி’ல் இணைந்த ஜிப்ரான், அனிருத்!]

வைபவ் நடிக்கும் ‘சிக்சர்’ படத்திற்கு ஜிப்ரான் இசையில் பாடிய  அனிருத்!

செய்திகள் 5-Jul-2019 12:26 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சிக்சர்’. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக ஜிப்ரான் இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவர். இதற்கு முன் வேறு இசை அமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ள அனிருத் இப்போது ஜிப்ரான் இசையிலும் பாடியுள்ளார். ஜிப்ரான் இசையில் அனிருத் பாடுவது இதுதான் முதல் முறை! இது குறித்து ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘எனது இசையில் அனிருத் முதன் முதலாக பாடியுள்ளார். ‘பாபா பிளாக் ஷிப்…’ என துவங்கும் பாடலை பாடியுள்ளார்! நன்றி பிரதர்’’ என பதிவிட்டுள்ளார்.

‘சிக்சர்’ படத்தில் வைபவுக்கு ஜோடியாக பால்க் லால்வானி நடிக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். ‘வால்மார் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;