அருண் விஜய் இப்போது ‘அக்னி சிறகுகள்’, ‘சாஹோ’, ‘பாக்ஸர்’, ‘மாஃபியா’ என்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்! இதில் கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாஃபியா’ பாடத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென விவேக் இயக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ‘பாக்ஸர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை பார்த்து தான் அதிர்ச்சியடைந்து விட்டதாக அருண் விஜய் நேற்று இரவு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘மாஃபியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சில தினங்களுக்கு முன்தான் வெளியிட்டோம். அதனால் ‘பாக்ஸர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சில மாதங்கள் கழித்து சிறப்பாக வெளியிடலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், திடீரென்று லீக் ஆனது. இது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் மக்கள் அதற்கு தரும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்திற்காக 9 மாதங்கள் கடினமாக உழைத்துள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.. ‘
‘ETCERTERA ENTERTAINMENT’ நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் படம் பாக்ஸர்;. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமக்கிறார். மார்கஸ் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கிறார்.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி...