இந்த வார ரிலீஸில் ‘ராட்சசி’

இந்த வார ரிலீசாக ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’, மற்றும் ‘களவாணி-2’,  ‘காதல் முன்னேற்ற கழகம்’, ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ ஆகிய 4 படங்கள் வெளியாகிறது!

செய்திகள் 4-Jul-2019 5:58 PM IST Top 10 கருத்துக்கள்

சென்ற வாரம் ‘சிந்துபாத்’, ‘தர்மபிரபு’, ‘ஜீவி’, ‘ஹவுஸ் ஓனர்’, ‘நட்சத்திர ஜன்னலில்’ ஆகிய ஐந்து புதிய திரைப்படங்கள் வெள்ளித்திரைக்கு வந்தன! அந்த வரிசையில் இந்த வாரம், அதாவது நாளை (5-7-19) எத்தனை நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன? அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த ஒரு கண்ணோட்டம் இது!

1.ராட்சசி

அறிமுக இயக்குனர் Sy.கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்கும் படம் ‘ராட்சசி’. தரமான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், கவிதா பாரதி, ரமேஷ் பேரடி, முத்துராமன், சத்யன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒரு அரசாங்க பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை தாங்கி வரும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘36 வதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘காற்றின் மொழி’ என்று கதாநாயகி கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகாவின் ‘ ராட்சசி’ மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை நிச்சயமாக ‘ராட்சசி’ நிறைவேற்றும் என்கின்றனர் படக்குழுவினர்!

2. களவாணி-2

‘வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக சற்குணம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்துள்ள படம் ‘களவாணி-2’. விமல், ஓவியா, இளவரசு, சரண்யா பொண்வண்ணன், விக்னேஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘களவாணி-2’ என்று பெயரிடப்பட்டுள்ளதால் இது ‘களவாணி’ படத்தின் தொடார்ச்சி கதையாக இருக்கும் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், முதல்பாக ‘களவாணி’ படத்தின் தொடர்ச்சி கதை இல்லை ‘களவாணி-2’ என்பதை இயக்குனரும் தயாரிப்பாளருமான சற்குணம் சமீபத்தில் தெரிவித்துள்ளார். ‘களவாணி’ படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளான நிலையில் இந்த வார ரிலீஸாக ‘களவாணி-2’ வெளியாக இருக்கிறது. விமலின் 25-ஆவது படமாக அமைந்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை மசானி கவனித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை நடராஜன் சங்கரன் அமைத்திருக்க, பாடல்களுக்கு, மணி அமுதவன், ரெனால்ட் ரீகன் ஆகியோர் இசை அமைத்துள்ளன்ர்.

3. காதல் முன்னேற்ற கழகம்

பிருத்திவி பாண்டியராஜன், சாந்தினி இணைந்து நடிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. மாணிக் சத்யா இயக்கியிருக்கும் இந்த படத்தில் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், அமீர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ‘ப்ளூ ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் மலர்கொடி முருகன் தயாரித்துள்ள இந்த படமும் இந்த வார ரிலீஸ் களத்தில் உள்ள படமாகும்!

4. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே

‘முத்துவிநாயகா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ராஜாமணி முத்து கணேசன் தயாரித்துள்ள படம் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’. இயக்குனர் கார்த்திக் ரகுநாத்திடம் உதவியாளராக இருந்த முருகலிங்கம் இயக்கியுள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை காரைக்குடி நாராயணன் எழுதியுள்ளார். இந்த படத்தில் டி.வி.புகழ் ஜெகன் முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக ரஹானா நடித்துள்ளார். இவர்களுடன் பாடலாசிரியர் பிறைசூடன், விவேக் ராஜ், சேரன் ராஜ், கொட்டாச்சி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள காதல் கதையாம்! இந்த படத்திற்கு சிவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.ஆர்.கவின் சிவா இசை அமைத்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட நான்கு நேரடி தமிழ் திரைப்படங்கள் இந்த வாரம் ரிலீசாகின்றன.

#Raatchasi #Kalavani2 #KaadhalMunnetraKazhagam #EnakkuInnumKalyanamAakale #PathinattamPadi #OhBaby #SpiderManFarFromHome

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராட்சசி - ட்ரைலர்


;