கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டநேஷனல்’ நிறுவனமும் ஆர்.ரவீந்திரனின் ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’. தூங்காவனம்’ படத்தை தொடர்ந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், நடிகர் நாசர் மகன் அபி ஹாசன், மலையாள நடிகை லெனா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது கமல்ஹாசன் பேசும்போது,
‘‘நல்ல சினிமாவையும், தமிழ் சினிமாவையும் உலக தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியிலேயே தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினேன். ராஜ்கமல் நிறுவனத்தை துவங்கும்போது அக்ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஒரு அரசாங்கம் துரத்தும் அளவுக்கு கூட இந்நிறுவனம் படம் தயரித்துள்ளது. என்னோட முயற்சிகள் எல்லாம் எனக்கு பின்னாலும் தொடர வேண்டும்! ‘கடாரம் கொண்டான்’ படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும். இதை என் படம் என்பதற்காக சொல்லவில்லை. விக்ரமின் ஸ்டைலுக்காக! ‘மீரா’, ‘சேது’ போன்ற படங்களில் விக்ரமை பார்த்தபோது இவர் ஒரு பெரிய இடத்துக்கு வருவார் என்று தோன்றியது. அது நடந்துள்ளது. ‘கடாரம் கொண்டான்’ படத்தை ஒரு ரசிகனாக நான் மிகவும் என்ஜாய் பண்ணி பார்த்தேன். ஒரு படத்திற்கு எல்லாமே அமையாது. ஆனால் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் எல்லாமே அமைதுள்ளது. இந்த படம் வெளியான பிறகு விக்ரமை ‘கே.கே.’ என்றுதான் அழைப்பார்கள்.
ரசிகர்கள் நல்ல படங்களை வெற்றிபெற செய்ய வேண்டும். அப்போது தான் இதுபோன்ற தமிழ் சினிமாக்கள் உலக அளவில் பேசப்படும். இந்த படம் ஒரு ஆங்கில படம் போல இருக்கும் என்று விக்ரம் சொன்னார். அப்படி சொல்ல ஒரு தைரியம் வேண்டும்! அது விக்ரமிடம் இருக்கிறது. ஹீரோ என்றால் விக்ரம் மாதிரி இருக்கணும். புருஷ லட்சணம் அனைத்தும் பொருந்திய நடிகர் விக்ரம். அவர் ஒரு ஹாலிவுட் நடிகர் போல் இருக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்தின் 45-ஆவது தயாரிப்பான கடாரம் கொண்டான்’ இம்மாதம் 19-ஆம் தேதி ரிலீசாகும்’’ என்றார் கமல்ஹாசன்!
#KadaramKondan #ChiyaanVikram #Vikram #RajeshMSelva #Kamalahsaan #KadaramKondanOfficialTrailer
#Kamal
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...