பள்ளி மாணவியிலிருந்து மகளிர் குழு தலைவியாக புரொமோஷன் பெற்ற ஓவியா!

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிக்கும் ‘களவாணி-2’ ஜூலை 5-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 3-Jul-2019 7:29 PM IST VRC கருத்துக்கள்

‘வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக சற்குணம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் ‘களவாணி-2’. இந்த படம் வருகிற 5-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சற்குணம், ஓவியா, இளவரசு, சரணா பொன்வண்ணன், விக்னேஷ் உட்பட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓவியா,

‘‘என் முதல் படம் ‘களவாணி’ சற்குணம் சார் தான் எனக்கு ஓவியா என்று பெயர் வைத்தார். கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அதே முகங்களை ‘களவாணி-2’ மூலம் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ‘களவாணி-2’ படத்தில் எனக்கும், விமலுக்கும் இடையில் இருக்கிற கெமிஸ்ட்ரியை விட இளவரசு சார், சரண்யா மேடம் இருவருக்கும் இடையில் இருக்கிற கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். விமல் இப்போது இங்க இல்லை. அவருக்கு நான் ரொம்பவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவர் தான் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். ‘களவாணி’யை விட ‘களவாணி-2’ உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். காரணம் இதில் காமெடி, ரொமான்ஸ், ஃபேமிலி சென்டிமென்ட், எமோஷன் என்று எல்லாம் விஷயங்களும் இருக்கிறது’’ என்றார்.

தொடர்ந்து இயக்குனரும் படத்தின் தயாரிப்பளருமான சற்குணம் பேசும்போது, ‘‘களவாணி’ முதல் பாகத்தை நீங்கள் எல்லோரும் பார்த்து என்ஜாய் பண்ணியிருப்பீங்க! அதே நம்பிக்கையுடன் ‘களவாணி-2’ படத்தை பார்க்க தியேடருக்கு வாங்க! ‘களவாணி’யை விட நீங்கள் ‘களவாணி-2’வை என்ஜாய் பண்ணுவீங்க!

விமல் இங்கு வரவில்லை! அவர் ஒரு படப்பிடிப்பு விஷயமாக கேரளா கொச்சியில் இருக்கிறார். ‘களவாணி-2’ விமலுக்கு 25-ஆவது படம்! அவரை பற்றி சொல்வதென்றால் ‘களவாணி’ வெளியாகி ஒன்பது வருடங்களாகி விட்டது. இருந்தாலும் அந்த இடைவெளி தெரியாத மாதிரி தன்னை சிறப்பாக வடிவமைத்து இப்படத்தில் நடித்திருக்கிறார். அதைப் போலத்தான் ஓவியாவும். அவர் முதல் பாகத்தில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார். இந்த படத்தில் மகளிர் குழு தலைவியாக நடித்துள்ளார். இது ‘களவாணி’ படத்தின் தொடர்ச்சி கதை இல்லை என்று தான் படம் துவங்கும். ‘களவாணி-2’ படம் உருவாக என்னுடன் ஒத்துழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி! இந்த படத்திற்கும் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்றார் சற்குணம்!

#Sarkunam #Oviya #Vimal #Kalavani2 #Kalavani #VarmansProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;