ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?

‘தர்பார்’ படத்தை தொடர்ந்து டோலிவுட் நடிகர்  அல்லு அர்ஜுனை இயக்க இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்!

செய்திகள் 2-Jul-2019 5:04 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ரஜினிகாந்த் நடிக்க ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரையிலும் அல்லு அர்ஜுன் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடித்ததில்லை. ஏற்கெனவே லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு நேரடித் தமிழ் படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தின் அறிவிப்பு விழா கூட சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு அந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

அல்லு அர்ஜுனுக்கு ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்! அல்லு அர்ஜுனின் அந்த ஆசை ஏ.ஆர்.முருகதாஸ் மூலம் நிறைவேற இருக்கிறது என்றும் இந்த படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாக இருக்கிறது என்றும் கூறப்படுவதோடு இந்த படத்தை தயாரிக்க ‘கலைப்புலி’ எஸ்.தாணு முன் வந்துள்ளார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கெனவே தெலுங்கின் முன்னணி ஹீரோக்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோரை வைத்து படங்களை இயக்கியுள்ளார். அந்த வரிசையில் இப்போது அல்லு அர்ஜுனும் இடம்பெற உள்ளார். ‘தர்பார்’ படத்தின் வேலைகள் முடிந்ததும் அல்லு அர்ஜுன் பட வேலைகளில் ஈடுபட உள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ்!

#Darbar #AlluArjun #ARMurugadoss #KalaipuliSThanu #VCreations #Bunny

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;