நல்ல மெசேஜை சொல்ல வரும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’

அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் டாக்டர் தீரஜ், மாடல் அழகி பிரதாயினி நடிக்கும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’

செய்திகள் 2-Jul-2019 3:07 PM IST Top 10 கருத்துக்கள்

‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சந்துரு.கே.ஆர். இயக்கியுள்ள படம் ‘போதை ஏறி புத்தி மாறி’. இதில் கார்டியாலஜி மருத்துவத்தில் நிபுணராக இருக்கும் தீரஜ் கதையின் நாயகனாக நடிக்க, புதுமுகம் துஷாரா, பிரபல மாடல் அழகி பிரதாயினி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் மீரா மிதுன், ராதாரவி, சார்லி, மைம் கோபி, அர்ஜுன், ரோஷன், சரத், ஆஷிக் செந்தில் குமரன், சுரேகா வாணி, லிசி ஆண்டனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்திடம் உதவியாளராக இருந்த கே.பி.இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை சாபு ஜோசஃப் செய்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ…

முதலில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிதி சாகர், ‘‘போதை ஏறி புத்தி மாறி’ தலைப்புக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. ஆனால் இந்த தலைப்புதான் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். காரணம் படத்தின் கண்டன்ட் அப்படி! கடந்த மாதம் இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ‘அனைவரும் இந்த படத்தை பாரக்க வேண்டும்’ என்று சொல்லி படத்திற்கு U/A சர்டிஃபிக்கெட் கொடுத்தார்கள்’’ என்றார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணிய்ம் பேசும்போது, ‘உதயநிதி ஸ்டாலின் மூலம் தான் எனக்கு இந்த படத்தின் ஹீரோ தீரஜ் அறிமுகம். அவர் ஒரு மருத்துவர். என் மனைவி மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது என் மனைவியின் உயிரை காப்பற்றியது தீரஜ் தான்! அந்த நன்றி கடனுக்கு நான் ஒளிப்பதிவு செய்த படம்தான் இது’’ என்றார்.

படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான பிரதாயினி பேசும்போது, ‘‘இதற்கு முன் நான் எந்த கதையும் கேட்டதில்லை. ஏனெனில் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. இயக்குனர் சந்துரு இந்த கதையை சொல்லி என்னிடம் நடிக்க கேட்டபோது மறுக்க முடியவில்லை. காரணம் இந்த படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்தது’’ என்றார்.

இயக்குனர் சந்துரு பேசும்போது, ‘‘எனக்கு இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் தீரஜ் தான். குறும்படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோது ஒரு ஐடியா கிடைத்தது. அதை அவரிடம் சொன்னபோது நல்லா இருக்கு, இதை படமாக பண்ணலாம் என்று சொன்னது அவர்தான்! அப்படி உருவானதுதான் இந்த படம். நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை. குறும்படங்களை இயக்கிய அனுபத்தோடு ஒரு ரசிகனா இந்த படத்தை இயக்கி இருக்கிறேன். இந்த படம் நல்ல மெசேஜ் சொல்லும் படமாகவும் இருக்கும்’’ என்றார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் டாக்டர் தீரஜ் பேசும்போது, ‘‘சிறு வயதில் இருந்தே எனக்கு நடிக்கும் ஆசை இருந்தது. நேரம் கிடைக்கும்போது அதற்கான முயற்சிகளை செய்து வந்தேன். அதே நேரத்தில் நான் படித்த மருத்துவத்தை கை விடாமல் தினமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டும் இருக்கிறேன். ஸ்கூலில் ஒன்றாக படித்த நிறைய பேர் சேர்ந்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு ஹெட் மாஸ்டராக இருந்து இந்த படத்தை சிறப்பாக கொண்டு வந்ததில் ஒளிப்பதிவாளர் சுப்பிரமணியத்துக்கு நிறைய பங்குண்டு! இம்மாதம் 12-ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார் தீரஜ்.

BodhaiYeriBudhiMaari #Dheeraj #KP #ChandruKR #RadhaRavi #Charlie #Ajay #Pradaini #Dushara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாக்பாட் ட்ரைலர்


;