மீண்டும் இணையும் செல்வராகவன், தனுஷ்?

‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகத்தில் இணையும் செல்வராகவன், தனுஷ்!

செய்திகள் 2-Jul-2019 11:38 AM IST VRC கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘NGK’. சூர்யா, சாய்பல்லவி, ரகுல்ப்ரீத் சிங் முதலானோர் நடித்த இந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன் தான் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இப்போது பிசியாகி உள்ளார்! செல்வராகவன் அடுத்து இயக்க இருக்கும் படம் ‘புதுபேட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஸ்நேகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்து 2006, மே மாதம் வெளியான படம் ‘புதுப்பேட்டை’. இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து செல்வராகவனுக்கும் தனுஷுக்கும் மிகப் பெரிய புகழை தேடித் தந்தது. ‘புதுப்பேட்டை’ படம் வெளியாகி கிட்டத்தட்ட 13 வருடங்களான நிலையில் செல்வராகவனும், தனுஷும் மீண்டும் அதன் இரண்டாம் பாகத்தில் இணைய இருக்கிறார்கள் என்றும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#Selvaraghavan #Dhanush #YuvanShankarRaja #Pudhupettai #Pudhupettai2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;