‘STR 45’ முக்கிய தகவல்!

சிம்புவும் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

செய்திகள் 1-Jul-2019 4:58 PM IST VRC கருத்துக்கள்

சிம்புவும், கௌதம் கர்த்திக்கும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்றும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தகவலை சமீபத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். கன்னடத்தில் ‘மஃப்டி’ என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கிய நார்தன் இப்படத்தை இயக்குகிறர் என்ற தகவலையும் வெளியிட்டிருந்தோம். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூரிலிருந்து பல மைல் தொலைவிலுள்ள ஒரு இடத்தில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் கலந்துகொண்டு நடித்து வந்தனர். இந்நிலையில் இந்த படப்பிடிப்பு முடிவடைந்த தகவலை கௌதம் கார்த்திக் சிம்புவுடன் எடுத்துகொண்ட் ஒரு செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிபடுத்தி உள்ளார். இது சிம்புவின் 45-ஆவது படம் என்பதால் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘STR 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் கன்னட ‘மஃப்டி’ படத்தின் ரீ-மேக் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் படக்குழுவினரிடமிருந்து வெளியாகவில்லை. இந்த படத்தின் தலைப்பு உட்பட்ட மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

#GauthamKarthick #STR #STR45 #StudioGreen #Narthan #Mufti

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;