‘பேட்ட’ வில்லனுக்கு ஜோடியான தமன்னா!

‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்த நவாசுத்தின் சித்திக், தமன்னா இணைந்து நடிக்கும் படம்!

செய்திகள் 29-Jun-2019 11:04 AM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தமன்னா மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். ‘போலே சுடியான்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் ஹீரொவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. இது குறித்த அறிவிப்பை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவிட்டுள்ளார். இந்த படத்தை நவாசுதீனின் தம்பி ஷமாஸ் நவாப் சித்திக் இயக்குகிறார். இந்த படத்தில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யாப் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான தமிழ் படங்கள் ‘கண்ணே கலைமானே’ மற்றும் ‘தேவி-2’. இந்த படங்களை தொடர்ந்து சுந்தர்.சி.இயக்கத்தில் ஒரு படத்தில் தமன்னா நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

#Petta #NawazuddinSiddiqui #Tamannaah #Rajini #Vijaysethupathi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;