உருவாகிறாது டைம் டிராவல் படத்தின் இரண்டாம் பாகம்!

இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 27-Jun-2019 8:04 PM IST Top 10 கருத்துக்கள்

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயபிரகாஷ், பகவதி பெருமாள் ஆகியோர் நடிப்பில் 2015-ல் வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’. டைம் டிராவல் ரக படமாக அமைந்த இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக முதல்பாக ‘இன்று நேற்று நாளை’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.வி.குமார் அதிகாரபூர்வமாக அறிவிதுள்ளார். இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் இயக்க இருக்கிறார். இதில் ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன் நடிக்க இருக்கிறார். ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கிறது. 2020 மே மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;