இயக்குனர் சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் தயாரித்த ‘மீசையை முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்கள் மூலம் இணைந்த கூட்டணி சுந்தர்.சி, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி! இந்த இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை சுந்தர்.சி.தயாரிக்க, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா இயக்க, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படம் குறித்து ஆதி ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஏற்கெனவே இரண்டு ஹிட்டுகளை கொடுத்து விட்டோம்!. அடுத்ததாக மூன்றாவது ஹிட்டுக்காக இணைந்திருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் பெயரிடப்பாடத இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#HiphopTamizhaAdhi #SundarC #MeesayaMurukku #NatpeThunai #HHT3 #AvniMovies #AvniCinemax
‘மீசையை முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம்...
‘முகவரி’, ‘நேபாளி’, ‘தொட்டி ஜெயா’ முதலான படங்களை இயக்கிய V.Z. துரை இயக்கத்தில் சுந்தர்.சி., தன்ஷிகா...
‘ஆம்பள’ படத்தை தொடர்ந்து விஷாலும், சுந்தர்.சியும் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘ஆக்ஷன்’. டிரைடண்ட்...