சிபிராஜ் பட டைட்டில் பிரச்சனை முடிவுக்கு வந்தது!

சிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ பட டைட்டில் பிரச்சனை சுமுகமாக முடிவுக்கு வந்தது!

செய்திகள் 20-Jun-2019 1:01 PM IST Top 10 கருத்துக்கள்

சிபிராஜ் நடிப்பில் ‘ரங்கா’ மற்றும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ஒரு படம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் ‘வால்டர்’ என்ற படத்திலும் சிபிராஜ் நடிக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் ‘வால்டர்’ என்ற தலைப்புக்கு வேறு ஒரு படக்குழுவினரும் சொந்தம் கொண்டாடி பிரச்சனைகளை உருவாக்கினர். இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளில் ‘வால்டர்’ தலைப்பு பிரச்சனை சுமுகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் சிபிராஜ் நடிப்பில் ‘வால்டர்’ படம் எடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கும்பகோணத்தில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இப்போது விறுவிறுப்பாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், இவருடன் சமுத்திரக்கனி, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை ‘11.11 புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் டாக்டர் பிரபு திலக், திருமதி ஸ்ருதி திலக் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, தர்மபிரகாஷ் இசை அமைக்கிறார்.


#Sibiraj #Samuthirakani #Shirin Kanchwala #11:11 Productions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;