ரசிகர்களுக்கு விஜய் தரவிருக்கும் பிறந்தநாள் ட்ரீட்!

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிக்கும் ‘விஜய்-63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் குறித்த அறிவிப்பு!

செய்திகள் 19-Jun-2019 6:15 PM IST Top 10 கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், யோகி பாபு ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராஃப், தேவதர்ஷினி, வர்ஷா பொம்மல்லா உட்பட பலர் நடிக்கும் ‘விஜய்-63’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலியில் இந்த படத்திற்கு என்ன டைட்டில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வரும் ரசிகர்ளுக்கு மகிழ்ச்சியை தரும் விதமாக ‘விஜய்-63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுநாள் (21-6-2019) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். அத்துடன் செகண்ட் லுக் அதே தினம் இரவு 12 மணிக்கு வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22-ஆம் தேதி என்பதால் விஜய்-63 படத்தின் இந்த இரண்டு லுக்குகளும் விஜய் ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாள் ட்ரீட்டாக அமையவிருக்கிறது. ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்!

#Vijay #Thalapthi63 #Atlee #Nayanthara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;