‘VSP-33’-ல் இணைந்த பிரபல இயக்குனர்!

விஜய்சேதுபதி, அமலா பால் இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குனர் மகிழ் திருமேனியும் நடிக்கிறார்!

செய்திகள் 19-Jun-2019 11:51 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதியும், அமலாபாலும் முதன் முதலாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்றும் இது விஜய்சேதுபதியின் 33-ஆவது படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக ‘VSP33’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்ட்ர் பக்கம் மூலம் அறிவித்துள்ளார். முன் தினம் பார்த்தேன், தடையற தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யாபுக்கு குரல் கொடுத்திருந்தார்! இயக்குனர், டப்பிங் கலைஞர் என்று களமிறங்கிய மகிழ் திருமேனி இப்போது விஜய் சேதுபதி படத்தின் மூலம் நடிகரகாவும் களம் இறங்குகிறார். இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பிரிட்டோ கலை இயக்கத்தை கவனிக்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.
#VijaySethupathi #AmalaPaul #VSP33 #ChandraArts #CineInnovations # VenkataKrishnaRoghanth #MagizhThirumeni

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆடை ட்ரைலர்


;