விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ முக்கிய அப்டேட்!

விஜய் சேதுபதியின் ’சிந்துபாத்’ படத்திற்கு U/A சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 18-Jun-2019 1:28 PM IST VRC கருத்துக்கள்

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அருண்குமாரும், விஜய்சேதுபதியும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சிந்துபாத்’. ‘கே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ராஜராஜனும், ‘வான்சன் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சனும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற 21-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்திற்கு சென்சாரில் U/A சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ள தகவலை படக்குழுவினர் சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

விஜய்சேதுபதியுடன் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் இப்படம் தாய்லாந்த் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது ‘சிந்துபாத்’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஜய் காத்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ரூபன் கவனித்துள்ளார்.

#Sindhubaadh #VijaySethupathi #Anjali

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;