‘புலனாய்வு’ அதிகாரியாகும் அரவிந்த்சாமி!

சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் அரவிந்த் சாமு நடிக்கும் படத்திற்கு  ‘புலனாய்வு’ என்று பெயரிடப்பட்டுள்ளது!

செய்திகள் 18-Jun-2019 1:26 PM IST VRC கருத்துக்கள்

‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் இந்த படத்தை மதியழகனின் ‘Etctera Entertainment’ நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இந்த படத்தின் பூஜை சென்ற மே 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. சந்தோஷ் பி.ஜெயகுமாரின் வழக்கான ஃபார்முலாவிலிருந்து மாறுபட்டு டிடெக்டிவ் த்ரில்லர் ரக படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ‘புலனாய்வு’ என்று பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று காலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த படத்தில் அரவிந்த் சாமி புலனாய்வு அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். கலை இயக்கத்தை செந்தில் ராகவன் கவனிக்க, படத்தொகுப்பை பிரசன்னா ஜி.கே கவனிக்கிறார்! சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கும் நான்காவது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
#ArvindSwami #SanthoshPJayakumar #Pulanaivu #Dimman #EtceteraEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹோலா ஹோலா வீடியோ பாடல் - கஜினிகாந்த்


;