பூஜையுடன் துவங்கியது சிம்பு, கௌதம் கார்த்திக் நடிக்கும் படம்!

சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

செய்திகள் 17-Jun-2019 4:33 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்க, சிம்புவும் கௌதம் கார்த்திக்கும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்றும், இந்த படத்தை கன்னடத்தில் ‘மஃப்டி’ என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கிய நார்தன் இயக்குகிறார் என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் 20-வது தயாரிப்பான இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன் தினம் பூஜையுடன் துவங்கியது. இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் உடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் படத்தில் பணிபுரிய இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்கு பிறகு ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் சிம்பு, அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 23-ஆம் தேதி மலேசியாவில் துவங்க இருக்கிறது

#STR #GauthamKarthik #StudioGreen #Mufti #Narthan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;