சூர்யாவின் ‘சூரரைப் போற்று’வில் இணைந்த தெலுங்கு பிரபலம்!

சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் நடிக்கிறார்!

செய்திகள் 17-Jun-2019 4:18 PM IST Top 10 கருத்துக்கள்

‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி வரும் படம் ‘சூரரை போற்று’. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூர்யாவின் 38-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க, இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் “சூரரை போற்று’ படத்தில் நீங்கள் (மோகன் பாபு) இடம் பெற்றிருப்பதற்கு நன்றி! 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் சாதனையாளராக விளங்கி வரும் நீங்கள் இப்படத்தில் நடிப்பதன் மூலம் நான் கற்றுக்கொள்வதற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இப்படம் அமைந்துள்ளது. நன்றி சார்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘சூரரைப் போற்று’ படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிரார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிரர். சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கவனிக்கிக்றார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ வெளியாகும்


#SooraraiPottru #Suriya #SudhaKongra #GVPrakashKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NGK - ட்ரைலர்


;