தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் பட ஹீரோயின்!

துரை செந்தில் குமார் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் மெஹ்ரின் பிர்சதா

செய்திகள் 17-Jun-2019 4:16 PM IST Top 10 கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’, ‘ராட்சசன்’ படப்புகழ் ராம்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம், ‘கொடி’ படப் புகழ் துரைசெந்தில் குமார் இயக்கும் பெயரிடப்படாத படம் என்று இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இதில் வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ராம்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது. செந்தில் குமார் இயக்கும் படத்திற்காக சினேகா, நவீன் சந்திரா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மெஹ்ரின் பிர்சதா ஒப்பந்தமாகியுள்ளார். சந்தீப்கிஷன், விக்ராந்த் நடித்த ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, விஜய் தேவரகொண்ட நடித்த ‘NOTA’ உட்பட பல தமிழ் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ள மெஹ்ரின் பிர்சதா இப்படத்தின் மூலம் தனுஷுடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 34-வது தயாரிப்பாக உருவாகி வரும் இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசை அமைக்கிறார்கள். ஒம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

#Dhanush #SathyaJyothiFilms #MehreenPirzada #RSDuraiSenthiKumar #ProductionNo35

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;