அர்ஜுனுக்கு புதிய பட்டம் கொடுத்த விஜய் ஆண்டனி!

‘கொலைகாரன்’ நன்றி தெரிவிக்கும் விழாவில் அர்ஜுனுக்கு புதிய பட்டம் வழங்கிய விஜய் ஆண்டனி!

செய்திகள் 14-Jun-2019 12:49 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘கொலைகாரன்’. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற்து. இந்த வரவேற்புக்கு பத்திரிகையாளர்கள் வழங்கிய நல்ல விமர்சனங்களும் ஒரு காரணமாக அமைந்த நிலையில், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘கொலைகாரன்’ படக்குழுவினர் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது விஜய் ஆண்டனி பேசும்போது, ,

‘‘இப்படம் வெற்றிப் படமாக அமைய பத்திரிகையாளர்கள் தந்த நல்ல விமர்சனங்களும் ஒரு காரணம்! அதற்கு எல்லோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேஎன். என் நடிப்பில் சமீபத்தில் வெளியான பல படங்கள் தோல்வி படங்களாக அமைந்த நிலையில் ‘கொலைகாரன்’ எனக்கு வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த வெற்றிக்கு இப்படத்தில் என்னுடன் நடித்த அர்ஜுனும் ஒரு காரணம். அவர் தனது சுண்டு விரலில் வெற்றியை தூக்கி நிறுத்திவிட்டார். அத்துடன் அவர் இந்த படத்தில் மிக ஸ்டைலாகவும் நடித்திருந்தார். அதனால் ஆக்‌ஷன் கிங்கான அவருக்கு இந்த படத்தில் இருந்து ‘ஆக்‌ஷன் ஸ்டைல் கிங்’ என்ற பட்டத்தை கொடுக்கிறேன்’’ என்றார் விஜய் ஆண்டனி!

மேலும் விஜய்ஆண்டனி பேசும்போது, ‘‘இந்த படத்தில் கதாநாயகி ஆஷிமாவுடன் இரண்டு பாடல் காட்சிகளில் மிகவும் நெருக்கமாக நடித்தேன். எனக்கு ரொமான்ஸ் சரியாக வாராது என்று மீடியாக்கள் எழுதி வருவதை மாற்றியாக வேண்டும்! அதற்காகதான் அப்படி நடித்தேன். அதற்கு ஆஷிமாவும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார் விஜய் ஆண்டனி!
#Kolaigaran #VijayAntony #ActionKingArjun #Dhananjayan #BOFTAMediaWorksCreativeEntertainers #BOFTA

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் - ட்ரைலர்


;