அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லரில் இணையும் சிபிராஜ், சமுத்திரக்கனி!

அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் சிபிராஜ், சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் ‘வால்டர்’

செய்திகள் 14-Jun-2019 12:13 PM IST VRC கருத்துக்கள்

சிபிராஜ் நடிப்பில் ‘ரங்கா’ மற்றும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ஒரு படம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் சிபிராஜ் நடிக்கும் மற்றொரு பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் அன்பு இயக்க, இப்படத்திற்கு ‘வால்டர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் ரக படமாக உருவாகும் இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாஅர். இவருடன் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று கும்பகோணத்தில் துவங்கியது. ‘11.11 புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் டாக்டர் பிரபு திலக், திருமதி ஸ்ருதி திலக் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். தர்மபிரகாஷ் இசை அமைக்கிறர். சிபிராஜின் அப்பா சத்யராஜ் ‘வால்டர் வெற்றிவேல்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிலையில் இப்போது சிபிராஜ் ‘வால்டர்’ படம் மூலம் போலீஸ்காரராக மீண்டும் களம் இறங்குகிறார்.

#Ranga #Sibiraj #Sathyaraj #Samuthirakani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;