விஜய்சேதுதியும், அமலாபாலும் முதன் முதலாக இணையும் படம்!

எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அமலாபால் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம்!

செய்திகள் 14-Jun-2019 12:13 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதியும், அமலாபாலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் 33-ஆவது படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக ‘#VSP33’ பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை பழனியில் இன்று இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கி வைத்தார். இந்த படத்தை ‘சந்திரா ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறர். விஜய்சேதுபதியும், அமலாபாலும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இப்படம் கிறிதுமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய கதையமைப்பைக் கொண்ட படமாக உருவாகிறது. இதில் விஜய்சேதுபதி இசை கலைஞனாக நடிக்கிறார். இந்த படத்தில் அமலாபால் தவிர மற்றொரு முன்னணி நடிகையும், ஒரு வெளிநாட்டு பெண்ணும் நடிக்க இருக்கிறார்கள். விஜய்சேதுபதி, அமலாபால் தவிர்த்து இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் படத்தின் தலைப்பை படக்குழுவினர் வித்தியாமான பாணியில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பிரிட்டோ கலை இயக்கத்தை கவனிக்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.


#AmalaPaul #VijaySethupathi #NivasKPrasanna #SPJananathan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூங்கா - டைட்டில் டீசர்


;