நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் இயக்கும் அஜித் பட இயக்குனர்!

‘ஏகன்’ படத்தை தொடர்ந்து  ராஜுசுந்தரம் இயக்கும் படம் குறித்த தகவல்!

செய்திகள் 13-Jun-2019 11:10 AM IST VRC கருத்துக்கள்

பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராஜு சுந்தரம் அஜித் நடித்த ‘ஏகன்’ படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார். 2008-ல் வெளியான இப்படம் எதிர்பார்த்தது மாதிரி வெற்றிப் படமாக அமையவில்லை. இந்த படத்தை தொடர்ந்து ராஜு சுந்தரம் எந்த படத்தையும் இயக்கவில்லை. ‘ஏகன்’ வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகளான நிலையில் ராஜு சுந்தரம் மீண்டும் இயக்குனராக களம் இறங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களில் நடித்தவர் சர்வானந்த். இப்போது ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இவரை வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ராஜு சந்தரம் தனது அடுத்த படத்தை இயக்குகிறாராம். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

ராஜு சுந்தரத்தின் சகோதரர் பிரபுதேவா நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என்று தொடர்ந்து சினிமாவில் பயணித்து வரும் நிலையில் ராஜு சுந்தரமும் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலைகளில் பிசியாகியுள்ளாராம்!

#Ajith #RajuSundaram #Aegan #Sharwanand

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;