சமுத்திரக்கனி, ஆத்மியா இணைந்து நடிக்கும் படம்!

சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ஆத்மியா இணைந்து நடிக்கும் படம் ‘வெள்ளை யானை’

செய்திகள் 13-Jun-2019 11:06 AM IST VRC கருத்துக்கள்

‘திருடா திருடி’, ‘பொறி’, ‘யோகி’, ‘சீடன்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘வட சென்னை’ படத்தில் நடித்தவருமான சுப்பிரமணியம் சிவா இயக்கும் படம் ‘வெள்ளை யானை’. ‘WHITE LAMP TALKIES’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஆத்மியா இணைந்து நடிக்கின்றனர். ’மனங்கொத்தி பறவை’யில் நடித்தவர் ஆத்மியா! முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தப்பட்ட திரைப்படமான இப்படத்தில் யோகி பாபு, ஈ.ராமதாஸ், மூர்த்தி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாவா செல்லத்துரை, ‘சாலை ஓரம்’ ராஜு, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரனங்களும் உணவை சார்ந்து இருக்கிறது. உணவு விவசாயத்தையும், விவசாயியையும் சார்ந்து இருக்கிறது. விவசாயம் நீரை சார்ந்துள்ளது. விவசாய வாழ்வின் அன்பையும், வியர்வையையும், ஏமாற்றத்தையும், கண்ணீரையும், கோபத்தையும் நையாண்டித்தனமாகவும், நகைச்சுவையாகவும் இப்படத்தில் சொல்லியுள்ளார் சுப்பிரமணியம் சிவா! இறுதிகட்ட வேலைகளில் இருந்து வரும் இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவை விஷ்ணு ரங்கசாமி கவனித்துள்ளார். கலை இயக்கத்தை ஆ.ஜெகதீசன் கவனித்துள்ளார். சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயனின் தம்பி தினேஷ் சுப்பராயன் அமைத்துள்ளார். .

#VellaiYaanai #Samuthirakani #Aathmiya #WhiteLampTalkies #SubramaniamSiva #YogiBabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;