அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ டிரைலர் குறித்த அதிகாரபூர்வ தகவல்!

அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது!

செய்திகள் 12-Jun-2019 12:23 PM IST Top 10 கருத்துக்கள்

பாலிவுட் பிரபலம் போனிகபூர் தயாரிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படப் புகழ் இயக்குனர் வினோத் இயக்கும் இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க, வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியங், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து, இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. இப்போது அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக படக்குழுவினர் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நீர்வ ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#NerkondaPaarvai #Ajith #VidhyaBalan #ShraddhaSrinath #AbhiramiVenkatachalam #AndreaTaring #RangarajPandey #YuvanShankarRaja #NiravShah #HVinoth #TheeranAdhigaaramOndru

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;