தனுஷின் ‘அசுரன்’ டீஸர் எப்போது?

வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தின் டீஸர் தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது!

செய்திகள் 12-Jun-2019 11:58 AM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘அசுரன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷும், வெற்றிமாறனும் மீண்டும் இணைந்து உருவாக்கும் இந்த படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் ‘வி.கிரியேஷன்ஸ்’ நிறுவம தயாரிக்கிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கி வரும் ‘அசுரன்’ படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார். வட சென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறனும், தனுஷும் மீண்டும் இணைந்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸரை தனுஷின் பிறந்த நளான ஜூலை 28-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடித்துள்ள ‘பக்கிரி’ இம்மாதம் 21-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படங்கள் தவிர ‘கொடி’ படத்தை இயக்கிய துரைசெந்தில் குமார் இயக்கும் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.#Asuran #Dhanush #Vetrimaaran # ManjuWarrier #Pasupathy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;