கசப்பான சம்பவங்களை மறந்து நயன்தாரா பட வெற்றிக்கு வாழ்த்துச் சொன்ன விக்னேஷ் சிவன்!

நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் சொன்ன இயக்குனர் விக்னேஷ் சிவன்!

செய்திகள் 11-Jun-2019 1:39 PM IST VRC கருத்துக்கள்

‘உன்னைப் போல் ஒருவன்’, ‘பில்லா-2’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டொலேடி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘கொலையுதிர்காலம்’. வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் இந்த வாரம் 14-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

‘’கொலையுதிர்காலம்’ உலகம் முழுக்க வெளியாக எனது வாழ்த்துக்கள். ‘கொலையுதிர்காலம்’ படத்தை பார்த்தேன். நல்ல த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் ரசிப்பார்கள். த்ரில்லர் படங்களின் வரிசையில் இப்படமும் கவனம் பெறும். நயன்தாரா. உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இயக்குனர் சக்ரி டொலேடி தலைமையிலான டெக்னீஷியன்களும் சிறப்பாக பணியாற்றி தரமான ஒரு படத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளரும் இந்த படத்தின் மீது நல்ல கவனமும் அக்கறையும் செலுத்தியுள்ளார். தனிப்பட்ட முறையில் நமக்குள் கசப்பான தருணங்கள் இருந்தாலும், இறுதியில் பேச்சு வார்த்தைகள் மூலம் எல்லாம் சுமுகமாக முடிந்தது. நாம் எல்லோரும் ஒரே துறையில் பணி புரிகிறோம். நல்ல எண்ணங்கள் எப்போதும் நம்மை சுற்றி இருக்கின்றன. ‘கொலையுதிர்காலம்’ பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

சில நாட்களுக்கு முன் ‘கொலையுதிர்காலம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றபோது நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய ஒரு விஷயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த சமயத்தில் அந்த நிகழ்வு குறித்தும் ‘ கொலையுதிர்காலம்’ படக்குழுவினர் குறித்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறிய கருத்துக்களும் அப்போது சர்ச்சைக்குள்ளானது. அப்போது நடந்த விஷயங்களை குறிப்பிட்டு விக்னேஷ் சிவன் இப்போது ‘கொலையுதிர்காலம்’ படத்திற்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#VigneshShivan #Nayanthara #KolaiyudhirKaalam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;