‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்த மிஷ்கின்!

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ பட போஸ்டரில் மகாத்மா காந்தி படத்தை விட என் படத்தை பெரிதாக போடாதீர்கள் – மிஷ்கின் வேண்டுகோள்!

செய்திகள் 11-Jun-2019 11:10 AM IST VRC கருத்துக்கள்

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’, ‘போக்கிரிராஜா’ ஆகிய படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் P.K. ராம்மோகன் தயாரித்துள்ள இந்த படத்தில் இயக்குனர்கள் சுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது மிஷ்கின் பேசும்போது,

‘‘இப்படத்தில் என்னை நடிக்க கேட்டபோது முதலில் மறுத்து விட்டேன். திரும்பவும் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா கேட்டபோது, ‘இரண்டு நிமிடங்களில் கதை சொல்லி என்னை இம்பிரஸ் செய்தால் நடிக்கிறேன்’ என்று சொன்னேன். அதைப்போல இரண்டு நிமிடங்களில் கதை சொல்லி என்னை அசத்திவிட்டார் ராம்பிரகாஷ் ராயப்பா. அதன் பிறகே நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இதில் பயணியாற்றிய அனைவரும் சிறந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்திருக்கிறார்கள். இப்படக்குழுவினருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். படத்தின் விளம்பர போஸ்டர்களில் மகாத்மா காந்தியின் படம் இடம் பெறுகிறது. அவர் படத்தை விட என் படத்தை அதிலும் பெரிய தலையுடன் இருக்கும் படத்தை போட்டிருக்கிறீகள். தயவு செய்து அதை எடுத்து விடுங்கள். மகாத்மா முன்னால் நான் ஒரு சிறுதுளி கூட கிடையாது. எனவே இனிமேல் இந்த போஸ்டரை வெளியிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார். வழக்கமாக படத்தில் நடிப்பவர்கள் என் படத்தை இன்னும் பெரிதாக போடுங்கள் என்றுதான் சொல்வார்கள். ஆனால் மிஷ்கின் மகாத்மா காந்தி மீது வைத்திருக்கும் மரியாதை நிமித்தமாக இப்படி கூறியது படக்குழுவினரை கொஞ்சம் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த வாரம் வெளியாக இருக்கும் இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. படத்திற்கான பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைத்திருக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.ராமராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;