விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இணையும் படம்!

பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க/பெ ரணசிங்கம்

செய்திகள் 11-Jun-2019 10:38 AM IST VRC கருத்துக்கள்

அறம், ஐரா, தும்பா ஆகிய படங்களை தயாரித்த ‘கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘க/பெ ரணசிங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பெ.விருமாண்டி இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. ‘ரம்மி’, ‘பண்னையாரும் பத்மினியும்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களை தொடர்ந்து இப்படத்தில் விஜய் சேதுபதியும், ஐஸ்வர்யா ராஜேஷும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படத்தொகுப்பினை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படப் புகழ் சிவநந்தீஸ்வரன் கவனிக்கிறார். இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

#VijaySethupathi #KaPaeRanasingam #AishwaryaRajessh #MakkalSelvan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;